மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை குரோம்பேட்டையிலுள்ள சங்கரய்யா இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அவருக்கு சால்வை அணிவித்து நலம் விசாரித்தார். பதிலுக்கு சங்கரய்யாவும் எழுந்து நின்று முதலமைச்சரை வரவேற்று, சால்வையும் அணிவித்தார்.