நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருளர் பழங்குடியினர் வசிக்கும் மலைக்கிராமத்துக்கான சாலை வசதி இல்லாத நிலையில், குழந்தை பிரசவித்த பெண்ணை சிகிச்சைக்காக டோலி கட்டித் தூக்கிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
கொணவக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாலமொக்கை பழங்குடியின கிராமத்தில் மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சில நாட்களுக்கு முன் இக்கிராமத்தில் வீட்டிலேயே குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், சாலை வசதி இல்லாமல் வாகனங்கள் வர முடியாததால், மரக் கழியில் டோலி கட்டி அப்பெண்ணை படுக்கவைத்துத் தூக்கிச் சென்றுள்ளனர்.