12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 50 சதவீதம், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20 சதவீதம் மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று அரசு அறிவித்தது.
ஏற்கனவே ஜூலை 31ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, மதிப்பெண் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே நாளை அல்லது நாளை மறுநாள் முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.