உரிய நடைமுறையை பின்பற்றவில்லை எனவும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி கடந்த ஆட்சியில் விடப்பட்ட 240 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
உலக வங்கி உதவியுடன் அடையாறு, அண்ணாநகர், ராயபுரம் உட்பட 43 இடங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை புதுப்பிக்க 120 கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரி மாதம் விடப்பட்ட டெண்டர், ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சுமார் 119 கோடி ரூபாய் செலவில் 1600 ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்க விடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி, அலாரம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் நடைமுறை சிக்கல் இருப்பதை கண்டறிந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.