அதிமுக அரசால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களாக இருப்பதால் மாதம் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை செலவு செய்து டேட்டா கார்டுகளை புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவற்றை புதுப்பித்து தருவதோடு, இந்த ஆண்டு புதிதாய் சேரும் மாணவர்களுக்கு டேட்டா கார்டுகளை வழங்கவும் இ.பி.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.