கோவையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், டோக்கன்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி வாக்குவாதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமதுரை, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் நேற்று இரவு 10 மணி முதல் ஏராளமானோர் காத்திருந்தனர். இந்நிலையில் வடமதுரை அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட முகாம் முன் காத்திருந்த மக்கள் டோக்கன்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறி அங்கிருந்த காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பீளமேடு மாநகராட்சி பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்தவர்கள் டோக்கன் கொடுக்கவில்லை எனக்கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.