கடைசி நேரத்தில் அசம்பாவிதம்போல நீட் தேர்வு வந்துவிட்டால், மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே, அவர்களுக்கான நீட் பயிற்சி தொடர்ந்து கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட்தேர்வு நடக்கக் கூடாது என்பதுதான் அரசின் விருப்பம் என்றார்.
நீட் தேர்வின்போது நடைபெறும் கெடுபிடிகள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஒரு வேளை நீட் தேர்வு நெருக்கத்தில் வருகிறபோது, மாணவர்களுக்கான பாதிப்புகள் குறைக்கப்படும் என்று மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.