செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மனநல காப்பகத்தில் 15 வயது சிறுவன் கொன்று புதைப்பு..? எலும்புகள் கைப்பற்றப்பட்டது

Jul 13, 2021 10:44:50 AM

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மன நல காப்பகத்தில் கொடுமைக்குள்ளான 15 வயது சிறுவன் கொன்று புதைக்கப்பட்டதாக காப்பக நிர்வாகியின் 2-வது மனைவி அளித்த புகாரின் பேரில், ஆய்வு செய்த காவல்துறையினர், அங்கிருந்து சிறுவனின் எலும்புகளை தோண்டி எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் சேக் அப்துல்லா என்பவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அவிசோ மனநல காப்பகம் என்ற பெயரில் காப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.( இவரது இரண்டாவது மனைவி கலீமா பீவி இவர் தன்னுடைய கணவர் காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை கொடுமைப்படுத்துவதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த அக்பர் என்ற 15 வயது சிறுவனை அடித்து கொலை செய்து காப்பகத்திற்குள் புதைத்துள்ளதாகவும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை அதிகாரிகளும், வருவாய்துறையினரும் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு வந்து விசரணை நடத்தினர். உடன் அழைத்து வரப்பட்ட கலீமா பீவி சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். அங்கு கடப்பாரை மற்றும் மண்வெட்டி உதவியுடன் தோண்ட உத்தரவிட்டனர்.

அங்கு சுமார் 4 அடி ஆழம் தோண்டிய நிலையில் உள்ளே சிறுவனின் எலும்புகளும் மண்டை ஓடும் கைப்பற்றைப்பட்டது. அதனை தடயவியல் பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்


இதையடுத்து காப்பக நிர்வாகி சேக் அப்துல்லாவை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது தனது 2 வது மனைவி கலிமா பீவி தற்போது தன்னுடன் இல்லை என்றும் தனது காப்பகத்தில் பணிபுரிந்த விவேகானந்தன் என்பவனுடன் சென்று விட்டதாகவும் அப்படி செல்லும் போது தனது காப்பகத்தில் இருந்து 4 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதால் , பழிவாங்கும் நோக்குடன் நோயால் இறந்த சிறுவனை தான் கொலை செய்ததாக கலீமாபீவி பொய்யாக குற்றஞ்சாட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான அக்பர் 10 வருடமாக அவிசோ மனநலக் காப்பகத்தில் வளர்ந்து வந்ததாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந்தேதி அந்த சிறுவனுக்கு தொண்டை அடைப்பு நோய் ஏற்பட்டு இறந்து விட்டதால் திருப்பூர் ஜமாத்தார்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது தங்களால் சிறுவனை கொண்டு சென்று இறுதி காரியம் செய்ய முடியாது என்றும், நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறியதால், மனநல காப்பக வளாகத்திலேயே அந்த குழந்தையை அடக்கம் செய்ததாக காப்பக நிர்வாகி சேக் அப்துல்லா போலீசில் தெரிவித்துள்ளார்.

சேக் அப்துல்லா தெரிவிப்பது உண்மையா என்பதை அரிய காவல்துறையினர் சிறுவன் அக்பரின் உறவினர்களை அழைத்து விசரிக்க திட்டமிட்டுள்ளனர். சேக் அப்துல்லா சொல்வது போல காப்பகத்தில் உள்ள சிறுவன் நோயில் இறந்திருந்தால் முறையாக தகவல் தெரிவித்து இறப்புச்சான்று பெற்றிருக்க வேண்டும், அதனை செய்ய அவர் தவறியதால் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன நல காப்பகத்தில் சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Advertisement
முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது...3 பேர் படுகாயம்
குக்கிராமங்கள் வரை போதையால் பாதிப்பு... டாஸ்மாக் மது விற்பனையை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் திருமாவளவன் வலியுறித்தல்
நெல்லையிலிருந்து குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி... மார்த்தாண்டம் வரையில் மட்டுமே லாரியின் சி.சி.டி.வி பதிவு
சென்னை சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்பு அமைக்க திட்டம்
டிச.27 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48 ஆவது புத்தகக் கண்காட்சி
திட்டங்கள் விரைவாக நடக்க காரணமாக இருக்கும் ”அப்பாவுக்கு ஜே” நகைச்சுவை பேசிய அமைச்சர் கே.என்.நேரு
புல்லட் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறை... தனியாக சுற்றிய யானை கூட்டத்தோடு சேர்ந்துள்ளது
தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement