மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் அவர் பொறுப்பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.