ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை வருகிற 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் பல்வேறு இடங்களில் நேற்று துல் ஹஜ் மாத பிறை தென்பட்டது.
எனவே, இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆகையால் ஈதுல் அத்ஹா எனப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற 21ம் தேதி கொண்டாடப்படும் என்றும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.