கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் இருப்பதால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பும் நாட்களில் சிசேரியன் முறையில் குழந்தையை பெற்றெடுத்துக்கொள்வது தற்போது அதிகமாகிவருவதாகவும், இதுபோன்று குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்து கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.