கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கபசுர குடிநீர் குப்பை வண்டியில் வைத்து விநியோகிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜயபுரம் 9வது வார்டு பகுதியில் ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக வந்த தகவலையடுத்து குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் வாகனத்தில் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி ஊழியர்களையும் குப்பைவண்டியையும் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.