அரசுப் பேருந்துகளின் பயன்பாடு முடிந்து, கழித்துக் கட்டுவதற்கான காலஅளவை மாற்றியமைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகள் ஆனாலோ அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் ஓடியிருந்தாலோ கழித்துக் கட்டப்படும். இது, 7ஆண்டுகள் அல்லது 12லட்சம் கிலோமீட்டர் என மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல, மற்ற அரசுப் பேருந்துகள், 6 ஆண்டுகள் ஆனாலோ அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் ஓடியிருந்தாலோ கழித்துக் கட்டப்படும் என இருந்ததை, 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய சாலை வசதிகளை கருத்தில் கொண்டும், நவீன வடிவமைப்பு மற்றும் நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும் இம்மாற்றம் செய்யப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.