கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அங்கு கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வருவோர் இபாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் இ-பாஸ் இருந்தும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் இருந்து பஸ் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு, ரயில் பயணிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.