இட ஒதுக்கீடு குறித்து எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் இட ஒதுக் கீட்டை 5 சதவீதமாக உயர்த்தக்கோரி, மதுரை ஜலாலுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். பொருளாதாரம், மதம் மற்றும் மக்கள்தொகை உயர்வு அடிப்படையில் உள் இட ஒதுக்கீட் டில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை என வாதிட்டார்.
விசாரணையின் முடிவில், இட ஒதுக்கீடு பிரச்சினையில் தலையிட மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.