நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள் ளது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு குழு அமைத்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.