நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான ஆய்வு 90சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
4வது ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன், மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் படி பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்துக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
குழுவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் உத்தரவு வந்த பின்னரே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.