அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் பல நாட்கள் காத்திருந்தும் நெல் கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் பெய்த மழையால் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் பாழடைந்து விட்டதாக செய்திகள் வெளியாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொள்முதலுக்கான டோக்கன் விநியோகமும் முறையாக நடக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதலை விரைவுபடுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.