கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு தேவையில்லை என்றும், நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் பொது சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு COWIN என்கிற செயலி மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. அதன்படி முன்பதிவு செய்தவர்கள் எந்த நாளில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தகவல் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு செய்யாமலேயே தடுப்பூசி மையத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து தடுப்பூசி போடும் நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாக பொது சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.