அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பல்கலைக்கழகங்களின் 27 உறுப்புக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 41 உறுப்புக் கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
இவற்றில் 14 கல்லூரிகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில், எஞ்சிய 27 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அரசே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற கல்லூரிகளில் நடத்தப்படுவது போன்றே, இந்த கல்லூரிகளிலும் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.