தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 ஆயிரத்து 367 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 385 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை,196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 3 ஆயிரத்து 704 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவுக்கு 19 வயது காஞ்சிபுரம் இளைஞர், 25 வயது திருவாரூர் இளைஞர், 94 வயது காஞ்சிபுரம் மூதாட்டி உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்து 76 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.