கோவையில் spinal muskular atropthy பாதித்த தங்கள் குழந்தையின் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் 16 கோடி ரூபாயை கொடுத்து உதவக்கோரி ஒரு தம்பதியர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
கந்தே கவுண்டன் சாவடி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் - ரோமிலா தம்பதியினரின் 6 மாத கைக்குழந்தைக்கு spinal muskular atropthy டைப் 1 எனப்படும் அரிய வகை நோய் பாதிப்பு உள்ளது. இதனால் குழந்தையின் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் சிதைவடைந்து கை கால்கள் அசைவில்லா நிலையிலும், சாப்பிட முடியாமலும் உள்ளது.
இந்த பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் zolgensma எனப்படும் மருந்து கொடுக்கப்பட வேண்டும் என கூறப்படும் நிலையில், அதற்கு தேவைப்படும் 16 கோடி ரூபாயை கொடுத்து குழந்தையை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.