சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.,கவுடன் கூட்டணி வைத்ததால் தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து அதிமுக தோல்வி அடைந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சண்முகம், அதிமுக தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் என மக்கள் எதிர்பார்த்ததாகவும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக இழந்து தோல்வியைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சி.வி.சண்முகம் பேச்சுக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ராகவன், அதிமுகவால்தான் பாஜக தோற்றது என்கிற எண்ணம் தங்களிக்கும் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.