ஆபாச யூடியூப்பர் மதன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாக பேசியதாக வந்த புகாரில் கைது செய்யப்பட்ட டாக்சிக் மதன், ஏழை, எளியோருக்கு உதவுவதாக கூறி தன்னுடன் விளையாட இணையும் சிறுவர்களிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், மதன் ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவிற்கு ஒரு வருடம் சிறையில் வைக்க வழி செய்யும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.