தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த ஆண்டுக்கான முதல்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
அப்போது இதை தெரிவித்த மு.க. ஸ்டாலின், சென்னை பெருநகரத்தை வெள்ளநீர் சூழாமல் தவிர்க்க, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்திட ஒரு நிரந்தர திட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வெள்ளம் பாதிக்கும் மாவட்டமான கடலூருக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.