தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 ஆயிரத்து 867 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 445 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு மற்றும் நாமக்கல்லில் வைரஸ் தொற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 4 ஆயிரத்து 382 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு 25 வயது சேலம் இளம்பெண் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் உயிரிழந்தனர்.