நாளை முதல் தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறக்கப்படவுள்ளதால், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலை சுத்தம் செய்வதுடன், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவிலிலுள்ள, கேரளாந்தகன், ராஜராஜன், மராட்டா ஆகிய மூன்று நுழைவு வாயில்களை ஊழியர்கள் சுத்தம் செய்ததுடன், கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல், நாமக்கல் கைலாசநாதர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம், நாகையிலுள்ள நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்திலும், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்.