மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜலசக்தித்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லிக்குச் செல்கிறார்.
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாயன்று டெல்லியில் சந்திக்கிறார்.
அப்போது மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து, அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தவுள்ளார். கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியில் அணை கட்டியுள்ளதையும் எடுத்துரைக்கவுள்ளார்.