முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகும் என்றும் யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ஹிந்த் என்ற சொல் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் போனது தவறுதலாக நடந்திருக்கலாம் என்றும் அந்த சொல் நீக்கப்பட்டதால் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது என்று கூறுவது நியாயமா என்றும் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.