தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களில் இதுவரை கட்டணம் செலுத்தாதோர், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், படிப்பு முடித்ததற்கான சான்று உள்ளிட்டவற்றை அபராதத்துடன் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பேரிடர் சூழலில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாவிட்டாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர் என்றும் இதுவரை கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணத்தை செலுத்தாதோர், அபராதத்துடன் அதை செலுத்தி தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி பயிலும் 50 ஆயிரத்துகும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாத நிலையில் இனியும் அவற்றை செலுத்தாவிட்டால், மேற்கொண்டு அவர்கள் தேர்வு எழுதவும், படிக்கவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.