திருப்பூர் காய்கறி சந்தையில் பொது மக்கள் அதிகளவில் குவிந்ததால் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் உழவர் சந்தை, தென்னம்பாளையம் பகுதியில் உள்ள மொத்த காய்கறி சந்தை மற்றும் மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் மீன் மார்கெட்டிலிருந்து காய்கறி சந்தைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மீன் மார்கெட் மூடப்பட்டது. இதனால் மீன்வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.