தமிழ்நாட்டில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட மேலும் ஒருவார கால ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன. ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.
வணிக வளாகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரைசெயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் திறக்கும் நேரமும் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.