தெர்மோகோல் விமர்சனங்களையே கூலாக எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றிய கேள்வியால் செய்தியாளர் சந்திப்பில் டென்ஷன் ஆனார்.
மதுரையில் ஒருபுறம் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள், மற்றொரு புறம் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் படங்களுடன் சகாக்கள் புடைசூழ செல்லுர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கம்போல, லேசான புன்னகை மாறாமல், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த செல்லூர் ராஜூ, எம்ஜிஆருக்கு கூட ஆலோசனை சொல்லியிருப்பதாக சசிகலா கூறியது பற்றி கேட்டபோது பொறுமை இழந்தார். சசிகலாவால் அதிமுகவில் பிளவு ஏற்படுமா என செய்தியாளர் கேட்டபோது கூல் செல்லூரார் சற்று சூடாகப் பதில் கொடுத்தார்.
நாட்டுக்கு என்ன தேவையோ அதைப்பற்றிக் கேளுங்க சார்... என்று செல்லூர் ராஜூ பதிலளித்தபோது ஆதரவாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
ஆனால் சற்றும் கோபம் குறையாத முன்னாள் அமைச்சர், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கூறுவதற்குப் பதிலாக ஊடகங்களை மூன்றாவது தூண் என்று கூறி சில அறிவுரைகளையும் வழங்கினார்.