மதுரையில் குழந்தைகள் விற்பனை சர்ச்சையில் சிக்கிய இதயம் அறக்கட்டளைக்கு மாநகராட்சியால் வழங்கப்பட்ட உதவி மைய கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உதவி மையத்தின் பூட்டை உடைத்த அதிகாரிகள், உள்ளே இருந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு, சீல் வைத்தனர். மேலும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் ஆதரவற்றோர் காப்பகங்களிலும் அதிகாரிகள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு, மீட்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா, எச்.ஐ.வி. உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதில் குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும், பிற பரிசோதனைகளிலும் அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் உடல் ரீதியாக நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.