தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர் ஒருவன் வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுமனை புதுத்தெருவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான வசந்தி, நேற்றிரவு துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, மேல் சட்டையை கழட்டி முகத்தை மூடிக் கொண்டு சுவர் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவன் பதுங்கி பதுங்கி சென்று திடீரென கழிவறைக்குள் நுழைந்த அவன் வசந்தியிடம் இருந்து ஏழைரை சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டான்.
வசந்தியின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் திருடனை பிடிக்க முயன்றும், பிடிக்க முடியவில்லை.