மருத்துவர் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிச் சென்னை கிண்டி தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா சூழலில் சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கும் முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மக்கள் நல அரசு மட்டுமல்ல மருத்துவர் நலன் காக்கும் அரசாகவும் விளங்குவதாகத் தெரிவித்தார்.