கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் 794 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வைச் சேர்ந்த அசோக் குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில் தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன், தொடர்ந்துள்ள வழக்கில், வாக்கு எண்ணிக்கையின் போது 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவில் தன்னுடைய நிலம் தொடர்பான தகவலை அசோக்குமார் மறைத்துள்ளதாகவும்,தெரிவித்துள்ளார். எனவே அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.