சில நேரங்களில் அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், அதற்காக வருத்தப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதித்து மருத்துவர்கள் ஆலோசனைபடி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும், கடந்த 10 நாட்களாக தன்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திடவும் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி வரும் வதந்திகளை நிர்வாகிகள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.