கொரோனா பரவல் காரணமாக நியாய விலைக் கடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிரல் ரேகைப் பதிவு முறை நாளை முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், நியாய விலை கடைகளில் கொரோனா நிவாரணம் மற்றும் 14 வகையாக பொருட்கள் வழங்கப்பட்டதால் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கைவிரல் ரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது நிவாரணம் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றதால், நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.