இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இரு தரப்புக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதியை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்த வழக்கில் லைகா தரப்பும், சங்கர் தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டதால், இருதரப்பும் தாங்களே சமரசம் செய்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த முயற்சியில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுமூக பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்த நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.