செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்..!

Jun 30, 2021 10:17:49 AM

மிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபி திரிபாதி புதன்கிழமைடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி பொறுப்பேற்க இருக்கும் புதிய டிஜிபி சைலேந்திர பாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பிறந்தவர்.

தமிழ்நாடு காவல்துறையின் 1987ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். மதுரை வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, பின் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை அடையாறு துணை ஆணையர் உள்ளிட்ட உயர் பதவிகளிலும் திறம்பட பணியாற்றியவர் சைலேந்திர பாபு.

லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தீயணைப்பு துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்த போது, 2015 ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு துறை வீரர்களுடன் களமிறங்கி துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

"நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம்" என்ற சைலேந்திர பாபுவின் புத்தகம், இளையோரின் ஐபிஎஸ் கனவை தூண்டி கவனம் ஈர்த்தது. புத்தக வாசிப்பு, ஊக்குவிக்கும் வகையில் பேச்சு என இளைஞர்களை கவர்ந்தவர். காவல்துறையில் இவரது பணியை பாராட்டி, குடியரசு தலைவர் விருது, பிரதமர் விருது, தமிழ்நாடு முதலமைச்சர் விருது மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார்.


Advertisement
எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
புதுமணத் தம்பதியிடமிருந்து ரூ.500 கேட்டு தாக்குதல் நடத்திய திருநங்கைகள் கைது
சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?
ஏர் ஹாரன் அடித்தபடி வாகன ஓட்டிகளை பயமுறுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர்.. மடக்கிப் பிடித்து எச்சரித்த பொதுமக்கள்
நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறித்த பைக் கொள்ளையர்கள்
16 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியில் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம்
பருவமழை காலத்தில் வரும் வறட்டு இருமல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் தவிர்த்து, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்
சிற்றார் அணை உபரி நீர் திறப்பு, கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
5 நாட்களாகியும் முளைக்காத நெல்மணி விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு..
நள்ளிரவில் எதிர் வீட்டுக்குள் மேலடை இல்லாமல் நுழைந்த போலீஸ் ஏட்டு

Advertisement
Posted Nov 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..


Advertisement