பன்னிரெண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளில் சேர்க்கையை துவங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறைகளை வெளியிட்டுள்ளதோடு, அந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதோர் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்.இ. கூறியுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும் என கோரினார்.