தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், அரசு மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் வாங்கவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இது வரை 353 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் இருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.