ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவனுக்கு உடந்தையாக இருந்த புகாரில் கைது செய்யப்பட்ட மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
8 மாத கைக்குழந்தை இருப்பதால், குழந்தையின் உடல் நலனை சுட்டிக்காட்டி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால், வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கும், ஆதாரங்களை அழிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை ஏற்று பூந்தமல்லி சிறையில் இருக்கும் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.