இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக் கோவில்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர மாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருக்கோவில் களில் பணியாற்ற 40 ஆயிரம் தற்காலிக பணியாளர் பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டிருந்ததாக அறிக்கையில் கூறியுள்ள அவர், தேர்தல் வந்து விட்டதால் இப்பணி நிறைவடையவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் கோவில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டுள்ளதாக அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.