செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு..! 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்

Jun 28, 2021 01:51:48 PM

மிழ்நாட்டில் மூன்றாவது வகையில் உள்ள 4 மாவட்டங்களில், 45 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. 2ஆவது வகையில் உள்ள 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

புதிய தளர்வுகளுடன் 7ஆவது முறையாக, ஜூலை 5ஆம் தேதி காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தொற்று பரவல் மிகவும் குறைவாக உள்ள மூன்றாவது வகை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதிகாலையிலேயே கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, சானிட்டைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு கோவில்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது, விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

சென்னை வடபழனி முருகன் கோவிலில், தமிழ்க்கடவுளை பயபக்தியோடு இறையன்பர்கள் வழிபட்டுச் சென்றனர்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு நிரந்தரமாக கோவில்கள் திறக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயில், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில், நடுபழனி மரகத பால தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்டகோயில்கள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன.

இதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிவாசல்களில் தொழுகையும், தேவாலயங்களில் பிரார்த்தனையும் நடைபெற்றது.

 


Advertisement
ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...
தஞ்சையில் தொடர் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர் சேதம்
திருப்பூரில் நள்ளிரவில் டீ கேட்ட பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்கள் 5 பேர் கைது
விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
3ம் வகுப்பு மாணவியை அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க மின்கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து
தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைத்தார்கள் தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள்
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித்துறை எச்சரிக்கை... முனைவர் பட்ட மாணவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்
94 வயது வரை உழைத்த கலைஞரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Advertisement
Posted Nov 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்


Advertisement