ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - முதலமைச்சர் அறிவிப்பு
வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில், நாளை திங்கட்கிழமை முதல் கூடுதல் தளர்வுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
23 மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை முதல் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க அனுமதி
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை குளிர்சாதன வசதியின்றி துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்கலாம்
23 மாவட்டங்களில், துணிக்கடைகள், நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஜவுளி கடைகள், ஜூவல்லரிகளைத் திறக்க அனுமதி
திருச்சி, அரியலூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வகை 2ல் உள்ளன
திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வகை 2ல் உள்ளன