பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் காய்கறிகள், பழங்கள், மலர்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், நெல்லைச் சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்படும் என்றும், மழையால் நெல் மூட்டைகள் நனையாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு டன் கரும்புக்கு நாலாயிரத்து 500 ரூபாயும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு மூவாயிரம் ரூபாயும் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும் என்றும், வேளாண் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு நெடுஞ்சாலைச் சுங்கக் கட்டணம் கிடையாது என்றும் பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் கூறப்படுள்ளது.