ஈரோடு அருகே சத்து மாத்திரைகள் என்று கூறி, மர்ம நபர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்ட ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சென்னிமலையில் டிப்டாப்பாக வந்த மர்ம நபர் ஒருவன், கொரோனா தடுப்பு முகாமிலிருந்து வருவதாகக் கூறி சத்து மாத்திரைகள் என சில மாத்திரைகளைக் கொடுத்துள்ளான். அதனை நம்பி சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் மல்லிகா என்பவர் வழியிலேயே உயிரிழந்தார். அவர்கள் சாப்பிட்ட மாத்திரை பூச்சிக் கொல்லி மாத்திரை (celphos tablet) என்பது தெரியவந்துள்ள நிலையில், மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.