தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கையில், திமுக தேர்தல் பிரச்சாரத்தில் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதியளித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வின் பின் விளைவுகளை அறிவதற்கு நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நடப்பாண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா என்ற குழப்பம் மாணவரிடமும் பெற்றோரிடமும் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.